தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நிரம்பி வழியும் தடுப்பணைகள், பெள்ளாதி குளம்

நிரம்பி வழியும் தடுப்பணைகள், பெள்ளாதி குளம்

நிரம்பி வழியும் தடுப்பணைகள், பெள்ளாதி குளம்


UPDATED : அக் 26, 2026 06:11 PM

ADDED : அக் 26, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:11 PM ADDED : அக் 26, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தடுப்பணைகள் மற்றும் பெள்ளாதி குளம் நிரம்பி வழிகின்றன.

மேட்டுப்பாளையம் தாலுகாவில் பெல்லாதி ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பில் பெரிய வெள்ளாதி குளம் உள்ளது. பெரியநாயக்கன்பாளையத்தில் துவங்கும் ஏழு எருமை பள்ளம், காரமடை ஊராட்சிகள், சிறுமுகை பேரூராட்சி வழியாக, பவானி ஆற்றுக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பள்ளத்தில் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சியில் மூன்று இடங்களிலும், பெள்ளாதி ஊராட்சியில், 4 இடங்களிலும், ஜடையம்பாளையம் ஊராட்சியில் இரண்டு, பெள்ளேபாளைம் ஊராட்சியில் மூன்று இடங்கள் என, மொத்தம், 12 இடங்களில் பள்ளத்தின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஏழு எருமை பள்ளத்தில் வரும் மழைநீர் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும்.

இதே போல், காரமடை மற்றும் கட்டாஞ்சி மலை சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீர், பெள்ளாதி குளத்துக்கு வரும் வகையில், ஏழு எருமை பள்ளத்தில் வரும் வெள்ள நீரின் ஒரு பகுதி, குளத்துக்கு வரும் வகையிலும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் பெய்து வரும் கனமழையால், பெள்ளாதி குளம் நிரம்பி வழிகிறது. அதோடு, ஏழு எருமை பள்ளத்தில் கட்டியுள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன.

விவசாயிகள் கூறுகையில், ‘காரமடை பகுதியில் பெய்த மழையால், ஏழு எருமை பள்ளத்தில் கட்டியுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன. இதனால் தடுப்பணைகள் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிணறுகளில், நீரூற்று அதிகளவில் இருக்கும். இதை பயன்படுத்தி ஆறு மாதங்களுக்கு விவசாய பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்கும்’ என்றனர்.

* கனமழையால், மேட்டுப்பாளையம் கல்லாறு காட்டாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு, மேட்டுப்பாளையம் வருவாய் துறை சார்பில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் தாலுகா மக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி பயன்படுத்த வேண்டும் என, சுகாதாரத்துறை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.-------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us