மலைப்பாதையில் 'ஓவர் லோடு'; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!
மலைப்பாதையில் 'ஓவர் லோடு'; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!
ADDED : மார் 09, 2026 05:51 AM

வாகனங்களில் 'ஓவர் லோடு' வால்பாறை - ஆழியாறு ரோட்டில் சில சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்கின்றனர். வளைவான பகுதிகள் அதிகம் இருக்கும் என்பதால் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, வால்பாறையில் இருந்து 'ஓவர் லோடு' ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கவின்: நீர்நிலையில் குப்பை கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் ரோட்டோரம் உள்ள நீர் தேக்க பகுதியில் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவில் தண்ணீர் மாசுபட்டு பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இங்குள்ள குப்பையை அகற்றம் செய்து, நீர்நிலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்கராஜ்: ரோடேங்கும் பள்ளம் கிணத்துக்கடவில் இருந்து பகவதிபாளையம் செல்லும் ரோட்டில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன் ராஜ்: போஸ்டர்கள் தாராளம் கிணத்துக்கடவு அருகே பழனிக்கவுண்டன்புதூர் பயணியர் நிழற்கூரையில் அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், பார்ப்பதற்கு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- -- ராஜ்குமார்: பாதுகாப்பில்லை பொள்ளாச்சியில், மேற்கு புறவழிச்சாலை கோவை ரோட்டில் ஆச்சிபட்டியில் இணையும் இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. தேவையான இடங்களில் தடுப்பு அமைத்தும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
-- ரமேஷ்: புகையால் மாசு உடுமலை பஸ் ஸ்டாண்ட் கடையிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. இதனால், அங்கு வரும் பயணியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது சம்பந்தமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
- செல்வம்: விபத்து அபாயம் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ஆர்ச் வேகத்தடை அருகே, பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோன்று, காமராஜர் ரோட்டிலும் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சம்பத்குமார்: தடுப்புச்சுவர் வேண்டும் உடுமலை எஸ்.வி.புரத்திலிருந்து கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்கு செல்லும் ரோட்டில் உள்ள பாறைக்குழிக்கு தடுப்பு சுவர் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்: எச்சரிக்கை பலகை அமைக்கணும் உடுமலை காந்திநகரில், ரோடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தில், எச்சரிக்கை பலகைகள் வைக்காததால், விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு இவற்றை வைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ்: இருக்கை வசதி இல்லை உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஆனைமலை பஸ்கள் நிற்கும் பகுதியில் இருக்கை வசதி இல்லாததால், பயணியர் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு கூடுதலாக இருக்கைகள் அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன்: தெருவிளக்குகள் எரிவதில்லை உடுமலை பெரியகோட்டை பிரிவு, ரோடு சந்திப்பில், தெருவிளக்குகள் முறையாக எரியாததால், இரவு நேரத்தில் மக்கள் பாதிக்கின்றனர். இதனால், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தெருவிளக்குகள் முறையாக எரிய மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனகராஜ்: குப்பைக்கு தீ வைப்பு உடுமலை பெதப்பம்பட்டி வாரச்சந்தை அருகே, குப்பையை திறந்தவெளியில் வீசி தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பைக்கு தீ வைப்போர் மீது ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா: குப்பை குவிப்பு கிணத்துக்கடவு சார்நிலை கருவூல அலுவலகம் முன், ரோட்டோரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டப்பட்ட இடத்தின் அருகாமையில் கடைகள் அதிகம் உள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரோட்டோரம் குப்பை கொட்டுவதை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவகுமார்:
