/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓவர் லோடு' ஏற்றி வந்த டிப்பர் லாரிகள் ;சிறைபிடித்த பொதுமக்கள்
/
'ஓவர் லோடு' ஏற்றி வந்த டிப்பர் லாரிகள் ;சிறைபிடித்த பொதுமக்கள்
'ஓவர் லோடு' ஏற்றி வந்த டிப்பர் லாரிகள் ;சிறைபிடித்த பொதுமக்கள்
'ஓவர் லோடு' ஏற்றி வந்த டிப்பர் லாரிகள் ;சிறைபிடித்த பொதுமக்கள்
ADDED : மார் 19, 2025 08:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கருங்கற்கள் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் லாரிகளை, மக்கள் சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், அதிகப்படியான கல்குவாரிகள் உள்ளன. பெரிய அளவிலான கற்கள், அரவை செய்வதற்காக, கனரக வாகனம் வாயிலாக ஆங்காங்கே 'கிரஷர்' அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு, அதிகப்படியான டிப்பர் லாரிகளில் கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால், டிப்பர் லாரிகளில், விதிமுறைக்கு மாறாக, அதிகளவு கற்கள் ஏற்றப்படுகிறது. விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் டிப்பர் லாரிகளில் கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வேட்டைக்காரன்புதுார் அருகே கருங்கற்கள் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் லாரிகளை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று லாரிகளை சோதனை செய்தனர். அப்போது, அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்ததால், இரு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கூறுகையில், 'வேட்டைக்காரன்புதுார் சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு, கனரக லாரிகளில், கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றி செல்வதால், வீடுகளை ஒட்டிய மழைநீர்வடிகால், தார்சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. இரு டிப்பர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. இவ்வழித்தடத்தில், கனரக வாகனங்களின் இயக்கத்தை தடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.