/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால கைப்பிடிச்சுவர் இடிப்பு
/
மேம்பால கைப்பிடிச்சுவர் இடிப்பு
ADDED : ஏப் 24, 2025 11:24 PM

கோவை; கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், வடகோவை மேம்பாலம் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால், மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் இடிக்கப்பட்டு, 7.5 மீட்டர் அகலத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது.
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, தலா, 7.5 மீட்டர் அகலத்தில் இருக்கிறது. கவுண்டம்பாளையத்தில் இருந்து வடகோவை சிந்தாமணி நோக்கி வரும்போது, மேம்பாலம் பகுதியில், 5.5 மீட்டரே இருக்கிறது.
சாலையின் அகலம் அப்பகுதியில், 2 மீட்டருக்கு சுருங்குவதால், அவ்வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமையிலான குழுவினர், விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்தனர்.
கிராஸ்கட் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், வடகோவை சிந்தாமணிக்குச் செல்ல இடதுபுறம் திரும்பிச் செல்வதற்கான இறங்கு தளத்தின் இருபுறமும் சிறிதளவு கைப்பிடிச்சுவர் பகுதியை இடித்து சற்றுத்தள்ளி கட்டினால், 7.5 மீட்டர் அகலத்துக்கு சாலை வசதி கிடைக்கும்; விபத்துகளை தவிர்க்கலாம். மேம்பாலத்தில் இருந்து வருவோரும் சிரமமின்றி இறங்கிச் செல்லலாம் என ஆலோசனை கூறினர்.
அதையேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், மேம்பாலத்தின் இறங்கு தள கைப்பிடிச்சுவர்களை இடித்துள்ளனர்.
இதற்காக, அவ்வழித்தடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் இயக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது; இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
இப்பகுதியிலும், சிந்தாமணி பகுதியிலும் மாநகராட்சி மூலமாக மையத்தடுப்பு சுவர் புதிதாக கட்டப்படுகிறது. இதன்பின், சாலை விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர்.

