/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 19, 2024 11:07 PM
கோவை: தொழிலாளர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, நடப்பாண்டு ஜூலை, 2ம் தேதிக்கு பின் புதிதாக துவங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் படிவம் Y-ல் (வை) பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பெறப்பட்ட, 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்றிதழ் படிவம் Z-ல்(இசட்) இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அவ்வாறு, 24 மணி நேரத்திற்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.
அதேபோல, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு கட்டணம் ஏதுமின்றி மேற்குறிப்பிட்டுள்ள இணையவழி முகவரியில் தங்களது கடைகள், நிறுவனத்தின் விபரங்களை அறிவிப்பு படிவம் ZB-ல் (இசட், பி) ஓராண்டுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்தவுடன் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் படிவம் Z-ல் (இசட்) பதிவுச் சான்றிதழ் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவுச் சான்றிதழில் திருத்தங்கள் செய்யவும் மேற்குறிப்பிட்டுள்ள இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெறப்பட்ட, 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் படிவம் Z-ல் (இசட்) திருத்தங்கள் அடங்கிய புதிய பதிவுச் சான்றிதழ் இணையவழி தனத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.