/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதநல்லிணக்கம் வலியுறுத்தி பாதயாத்திரை
/
மதநல்லிணக்கம் வலியுறுத்தி பாதயாத்திரை
ADDED : அக் 03, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, காங்., சார்பில் பாதயாத்திரை நடந்தது.
காந்திய சிந்தனை, அமைதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி, கோவை மாவட்ட காங்., கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய பாதயாத்திரை, பாப்பநாயக்கன்பாளையம் காந்தி மண்டபம் வரை நடந்தது. காங்., மாநில செயலாளர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தர்குமார், மாநிலத் துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், மாநில பொதுச்செயலாளர் சரவணக்குமார் பச்சமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.