/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்மாற்றிகள் அமைப்பதில் முன்னோடியாக திகழும் பத்மவாஹினி டிரான்ஸ்பார்மர்ஸ்
/
மின்மாற்றிகள் அமைப்பதில் முன்னோடியாக திகழும் பத்மவாஹினி டிரான்ஸ்பார்மர்ஸ்
மின்மாற்றிகள் அமைப்பதில் முன்னோடியாக திகழும் பத்மவாஹினி டிரான்ஸ்பார்மர்ஸ்
மின்மாற்றிகள் அமைப்பதில் முன்னோடியாக திகழும் பத்மவாஹினி டிரான்ஸ்பார்மர்ஸ்
ADDED : செப் 30, 2025 10:28 PM
மி ன்சாரத் துறை மீதான ஆர்வத்தில், கடந்த 1996, பத்மவாஹினி டிரான்ஸ்பார்மர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை, அதன் நிறுவனர் வாதிராஜன் துவங்கினார்.
முதலில், 1000 சதுர அடி இடத்தில், சிறிய சேவைகளுடன் துவங்கிய நிறுவனம், மின்சாரத்துறையில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கியது.தொழில்துறை வட்டாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை பெருகவே, பொது சேவை, ரிவைண்டிங், பழுது பார்த்தல், மின்னழுத்த அளவை மாற்றுதல், ஆப் சர்க்யூட் டிரான்ஸ்பார்மர்களை ஆன் லோட் டேப் சேஞ்சர் டிரான்ஸ்பார்மர்களாக மாற்றுதல் போன்ற பல்வேறு சேவைகளும் துவங்கப்பட்டது.
இந்நிறுவனத்தில், 100 கே.வி.ஏ., முதல் 36 எம்.வி.ஏ., வரையிலான, பல்வேறு மின்னழுத்த நிலைகளில், 110 கே.வி., வரையிலான பல்வேறு திறன்களைக் கொண்ட மின்மாற்றிகளில், முக்கிய சேவை பணிகளை மேற்கொண்டுள்ளது.
தொடர்ந்து, 2001ம் ஆண்டு முதல், பி.ஏ -டி.,என்ற பிராண்ட் பெயரில் சொந்த மின்மாற்றிகளின் உற்பத்தி துவங்கப்பட்டது. இது, 230 கே.வி., வரையிலான மின்னழுத்த அளவு கொண்ட பல்வேறு திறன் மின்சாரம் மற்றும் விநியோக மின்மாற்றிகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை கொண்டுள்ளது.
சோலார் மின்மாற்றியிலும் இந்நிறுவனம் நிபுணத்துவம் வாய்ந்ததாகும். சோலார் பேனல்களால் உருவாக்கப்படும் நேரடி மின்னோட்ட (டிசி) மின்சாரத்தை மாற்று மின்னோட்டமாக (ஏசி) மாற்றுவதில், சோலார் மின்மாற்றிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பேனல்களை, மின் கட்டடத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய இணைப்பாகசெயல்படுகிறது.
சூரிய ஒளியில் இருந்து பயன்படுத்தப்படும் சுத்தமான, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பாதுகாப்பாக பரிமாற்ற உதவுகிறது. குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களில் அமைக்கப்படும் கிரிட் இணைக்கப்பட்ட ஒளி மின்னழுத்த அமைப்புகளுக்கு ஒற்றை மற்றும் டபுள் எல்வி, டிரிபிள் மற்றும் நான்கு மடங்கு எல்லி கொண்ட இன்வெர்ட்டர் டியூட்டி டிரான்ஸ்பார்மர்களை தயாரிப்பதில் இந்த நிறுவனம் நிபுணத்துவம் வாய்ந்தது. தற்போது, எரிசக்தி தேவை அதிகரித்து வருவதால் ஹைபிரிட் டிரான்ஸ் பார்மர்கள் ஒரே நேரத்தில் சூரிய மற்றும் காற்று ஆற்றல் இரண்டிலும் மின்சார உற்பத்தி செய்யும் திறன் கொண்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் முதன் முறையாக இங்கு மட்டுமே தயரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது காற்று, சூரிய கலப்பின மின்மாற்றி சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலை விசையாழிகளில் இருந்து உருவாக்கப்படும் மின்னழுத்தத்தை பொறுத்து பயன்படுகிறது.
தரையிலேயே நிறுவும் வகையில் பேட் மவுண்ட் டிரான்ஸ்பார்மர்கள், மின்சக்தி விநியோக மாற்றியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி பொதுவாக நகர்ப்புற விநியோக அமைப்புகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் உள்ளதால் வரையறுக்கப்பட்ட இடங்களுக்குள் இதனை அமைத்துவிடலாம். இது மிகவும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து தயாரிக்கப்படுகிறது. இந்த மின்மாற்றிகள் 500 முதல் 10 ஆயிரம் கே.வி.ஏ., முதன்மை மின்னழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விபரங்களுக்கு 98430 35111, 98430 49222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.