/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெயின்டர் சடலம்: கிணற்றில் மீட்பு
/
பெயின்டர் சடலம்: கிணற்றில் மீட்பு
ADDED : பிப் 27, 2024 11:39 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே உள்ள, தனியார் தோட்டத்து கிணற்றில் இருந்து பெயின்டர் சடலத்தை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கிணத்துக்கடவு, பகவதிபாளையத்தை சேர்ந்தவர் கிரி, 20, பெயின்டர். இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் இவரை தேடிவந்தனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் சிலர், பகவதிபாளையம் அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் சடலம் மிதப்பதை உறுதி செய்து, கிணத்துக்கடவு போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த பிரேதத்தை மீட்டனர். இதில், கிணற்றில் பிரேதமாக இருந்தது கிரியின் சடலம் என்பதை, குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து, கிரி கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

