ADDED : மே 10, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழாவையொட்டி அனுமந்த வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா விழாவை ஒட்டி, முதல்நாள் அன்ன வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாத பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
நாளை, 11ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு அலங்காரம், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 13ம் தேதி பரிவேட்டை, 14ம் தேதி சேஷ வாகன உற்சவம் நடக்கிறது.

