
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி அடுத்த க.ராயர் பாளையம் ராயர் வனத்தில், சூலூர் ஒன்றிய சேவா பாரதி, துளிர் அறக்கட்டளை, கருமத்தம்பட்டி நகராட்சி போக்குவரத்து ஆய்வு குழு, வேலவன் காவடி குழு சார்பில், பனை விதைகள் நடும் பணி நடந்தது. இதில், ஏராளமானவர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் பனை விதைகளை நடவு செய்தனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் பனை விதைகளை அதிகளவு நடவு செய்ய முடிவு செய்தோம். இதுவரை, 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்துள்ளோம் என அமைப்பினர் கூறினர்.