/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாம்பாட்டி சித்தர் படம் வெளியீடு
/
பாம்பாட்டி சித்தர் படம் வெளியீடு
ADDED : நவ 25, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: பஞ்ச சித்ரா பவுண்டேஷன் பார் ஆர்ட்ஸ் அண்டு கல்ச்சர் அமைப்பு சார்பில், ஓவியர் பருதி ஞானம் வரைந்த, பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்பட ஓவியம் வெளியீட்டு விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்றுமுன்தினம் நடந்தது.
இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், சுவாமி வேதாந்தானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பாம்பாட்டி சித்தரின் திருவுருவ படத்தை திறந்து, வெளியிட்டனர்.

