/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா
/
பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா
ADDED : பிப் 04, 2025 11:58 PM
பெ.நா.பாளையம்; பாலமலை ரங்கநாதர் கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா, இம்மாதம், 10ம் தேதி நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. ராமானுஜர் வருகை தந்த திருக்கோவில் என பெயர் பெற்ற கோவில் வளாகம் அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை பிரதிஷ்டை விழா, இம்மாதம், 10ம் தேதி திங்கட்கிழமை காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது.
விழாவையொட்டி, 9ம் தேதி வாஸ்து சாந்தி, ஹோமம், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம் சாற்றும் முறை, தீர்த்த பிரசாதம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 10ம் தேதி காலை திருமஞ்சனம், ஹோமம், நாடி சந்தானம், யாத்திர தானம் நடக்கிறது.
தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள், பாலமலை ரங்கநாதர் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.