/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : மே 15, 2025 11:42 PM

சூலுார்; குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை, மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு , 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அத்திக்டவு குடிநீரும், உப்பு தண்ணீரும் வாரம் ஒரு முறை சப்ளை செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக, மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகினர். பல முறை ஊராட்சி செயலர், பி.டி.ஓ., விடம் முறையிட்டனர். கடந்த, மே 1 ம்தேதி நடந்த கிராம சபையிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் பி.டி.ஓ., நடத்திய பேச்சுவார்த்தையில் சீராக குடிநீர் சப்ளை செய்யப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில்,' மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்தால் எப்படி இருக்க முடியும். அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனரே தவிர, அதை செயல்படுத்துவதில்லை. அதனால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,' என்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கோவிந்தராஜ், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீராக குடிநீர் சப்ளை செய்வதாக உறுதி அளித்தை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.