ADDED : ஜூன் 06, 2025 11:49 PM
சூலுார், ;சூலுார் ஒன்றியத்தில் ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சூலுார் ஒன்றியம் கரவளி மாதப்பூர் ஊராட்சி செயலராக இருந்த லியோ மெர்வின், சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கும், அங்கிருந்த சரவணக்குமார் கரவழி மாதப்பூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி செயலராக இருந்த கார்த்திகேயன், சுல்தான்பேட்டை ஒன்றியம், எஸ். அய்யம்பாளையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ராசி பாளையம் ஊராட்சி செயலர் ராஜசேகரன், ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காரமடை ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலர் பிரபு, பிளிச்சி ஊராட்சிக்கும், அங்கிருந்த மோகன்குமார், சிக்கதாசம் பாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளார். சின்ன தடாகம் ஊராட்சி செயலர் செழியன், தீத்திபாளையம் ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.