ADDED : ஜூன் 11, 2025 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காரமடை வட்டாரம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலாளர் பிரபு, பெரியநாயக்கன் பாளையம் வட்டாரம், பிளிச்சி ஊராட்சி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய செயலாளர் மோகன் குமார், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
சின்னதடாகம் ஊராட்சி செயலாளர் செழியன், தீத்திபாளையம் ஊராட்சி செயலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கனகராஜ், பாலத்துறை ஊராட்சி செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். சுல்தான்பேட்டை வட்டாரம், ஜல்லிப்பட்டி ஊராட்சி செயலாளர் சையத் காஜா மைனுதீன், சின்னதடாகம் ஊராட்சி செயலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.