/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவில் குழந்தைகளை வரவேற்கிறது 'பாண்டா கரடி' ரயில்!
/
செம்மொழி பூங்காவில் குழந்தைகளை வரவேற்கிறது 'பாண்டா கரடி' ரயில்!
செம்மொழி பூங்காவில் குழந்தைகளை வரவேற்கிறது 'பாண்டா கரடி' ரயில்!
செம்மொழி பூங்காவில் குழந்தைகளை வரவேற்கிறது 'பாண்டா கரடி' ரயில்!
ADDED : டிச 14, 2025 08:00 AM

காந்திபுரம்: காந்திபுரத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமாக வருகின்றனர்.
வளாகத்துக்குள் நுழைந்ததும் பழமையான போன்சாய் மரங்களும், யானை சிற்பமும், புள்ளி மான் சிற்பமும் உங்களை வரவேற்கும். நீர் தவழ்ந்து வரும் செயற்கை மலைக்கன்றுகளில் ஆங்காங்கே புலி, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் முன்புறம் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இஷ்டப்பட்ட இடத்தில் நின்று, 'செல்பி' எடுத்துக் கொள்ளலாம். செம்மொழி பூங்காவின் உள்ளே, உணவு வசதியும் உண்டு.
23 வகையான தோட்டங்கள் உள்ளன. அதை பற்றிய அறிவிப்பு டிக்கெட் கொடுக்குமிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 1,600 வகையான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
குழந்தைகள் விளையாடுவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது; ஜாலியாக விளையாடுவர் என்பதில் சந்தேகமில்லை. செடிகளால் புதிர் விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ராட்டினங்களும் இருக்கின்றன. பூங்காவுக்குள் வலம் பாண்டா கரடி குட்டி டிரெய்ன் குழந்தைகளை ஈர்க்கிறது. பூங்காவை சுற்றிலும் 2.2 கி.மீ. துாரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல், இரவு 7 மணி வரை சுற்றிப்பார்க்கலாம்.

