ADDED : பிப் 03, 2025 04:08 AM

அன்னுார் : அத்திக்கடவு திட்ட பாராட்டு விழா கஞ்சப்பள்ளியில் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி,நேற்று காலை மாநாட்டு பந்தல் அமைப்பதற்கு பந்தல்கால் நடும் பணி சிறப்பு வழிபாடு உடன் துவங்கியது. இதில் அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாநாடு குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், '25 ஆயிரம் பேர் பங்கேற்கும்படி மாநாட்டு திடல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருவோரின் வாகனம் நிறுத்த 20 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் பாராட்டு விழா மாநாடு குறித்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் தோட்டங்களில் அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இத்திட்டத்திற்காக, 60 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டம் காட்சிப்படுத்தப்படுகிறது,' என்றனர்.