/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
ADDED : ஏப் 11, 2025 10:48 PM

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில் முருகன் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது.
சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவில், காலை 10:30 மணிக்கு, பழனி ஆண்டவருக்கு, பால், தயிர், நெய், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து கலச அபிஷேகம் நடந்தது.
மதியம் அலங்கார பூஜையும், புஷ்ப அர்ச்சனையும் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், அவிநாசி சித்தர் பீட சின்னசாமி சுவாமிகள் பூஜையை நடத்தி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், எல்லப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில், குன்னத்தூர் பழனியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

