/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் சுவாமி திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்
/
கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் சுவாமி திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்
கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் சுவாமி திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்
கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் சுவாமி திருக்கல்யாணத்தில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஏப் 11, 2025 10:32 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலை அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
சேரன் தொழிலாளர் காலனி செல்வவிநாயகர் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* கிணத்துக்கடவு பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி கோவிலில், பங்குனி உத்திர நாளான நேற்று பக்தர்கள் காவடி மற்றும் வேலுடன் பாதயாத்திரையாகவும், பால்குடம் எடுத்து, 'முருகனுக்கு அரோகரா' என, கோஷங்கள் முழங்க சன்னதிக்கு வந்தனர். சில பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
தொடர்ந்து சுவாமிக்கு, பால் பூஜை மற்றும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் அமர்ந்து சஷ்டி பாராயணம் செய்தனர்.
இதே போன்று, சிவலோக நாயகி உடனமர் சிவலோக நாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 73ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும் நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. உற்சவருக்கு, பால், சந்தனம், இளநீர், மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
* உடுமலை ருத்தரப்பநகர் சித்தி விநாயகர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி செல்வமுத்துக்குமார சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, காலை, 8:00 மணி மகா அபிேஷகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத செல்வமுத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.