ADDED : ஏப் 09, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், நாளை (11ம் தேதி) பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட, சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பூஜை நாளை, (11ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை ஆகியவை நடைபெற உள்ளன. பூஜையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

