/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலம்
/
பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலம்
ADDED : ஏப் 10, 2025 09:50 PM
பங்குனி உத்தரம் என்பது முருக பெருமானுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது, பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில், பன்னிரெண்டாவது மாதமான பங்குனியில், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரத்தில், முருகப்பெருமானுக்கு சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழநியில், பங்குனி மாத உத்திரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. பழநியில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவும், தேரோட்டமும் சிறப்பு வாய்ந்தவையாகும். அதேபோன்று, முருகப்பெருமான் சன்னதிகள் அனைத்திலும் பங்குனி உத்திர விழா வழிபாடு நடக்கிறது.
பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும். எனவே, நவபாசாணத்தால் ஆன முருகர் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க, மூலிகைகள் கலந்த காவிரியாற்று நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழாவாக, பங்குனி உத்தரம் திருவிழா பாரம்பரியாக கொண்டாடப்படுகிறது.
பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவில், அடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் இருந்து, பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்று, மலை மீதுள்ள மூலவருக்கு பால் அபிேஷகம் செய்து வழிபடுகின்றனர். வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் உற்சவருக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடக்கிறது.
பாடல் பெற்ற ஸ்தலம்
அருணகிரிநாதர் பொன்மலை ஸ்தலத்தில், 400வது திருப்புகளை பாடியுள்ளார் என்பது தனி சிறப்பாகும்.
கிணத்துக்கடவு அருகே உள்ள மயிலேறிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்ற முருக பக்தருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. பொன்மலை முருகனை தரிசனம் செய்து சென்ற பின், இவரது கனவில் முருகர் தோன்றி நாவில் எழுதிய பின், தீராத வயிற்று வலி குணமானதாக கோவில் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பொன்மலை வேலாயுத சுவாமியை, “கனக கிரித் திருப்புகழ்” என்ற தலைப்பில் பல பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடலில் 'உடலில் உள்ள வலி நீங்கும்' என்றும் அந்த முருக பக்தர் குறிப்பிட்டுள்ளார்.

