/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குனி உத்திரத்திருவிழா இன்று திருக்கல்யாணம்
/
பங்குனி உத்திரத்திருவிழா இன்று திருக்கல்யாணம்
ADDED : ஏப் 10, 2025 10:03 PM

வால்பாறை; வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு, இன்று மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.
பங்குனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரம் பங்குனி உத்திர திருவிழாவாக, முருகப்பெருமான் சன்னதியில் கொண்டாடப்படுகிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 73ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு சண்முகார்ச்சனை மற்றும் அபிேஷக அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில், இன்று (11ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
நாளை, (12ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றில் இருந்து, முருக பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

