/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் கால்வாயை துார்வாரணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
பி.ஏ.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் கால்வாயை துார்வாரணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் கால்வாயை துார்வாரணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பி.ஏ.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் கால்வாயை துார்வாரணும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 04, 2024 09:59 PM

பொள்ளாச்சி : 'பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு முன், கால்வாய்களை துார்வார வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.
விவசாயிகள் கூறியதாவது:
சேத்துமடை கால்வாயில், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், துார்வாரும் பணிகள் நடக்கின்றன. பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசாணை வந்து, 15 நாட்களாகியும், இன்னும் பணிகள் முடியாததால், தண்ணீர் திறக்கவில்லை.
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பணிகள் தாமதமாவதாக கூறுகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நஞ்சேகவுண்டன்புதுார் அருகே கால்வாய் முறையாக துார்வாரவில்லை.
கால்வாய் துார்வாரும் பணி, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மேற்கொள்வதால், பணம் அதிகம் செலவாவதுடன், கால தாமதம் ஏற்படுகிறது. வருங்காலத்தில் நீர்வளத்துறைக்கு நிதி ஒதுக்கி, பாசன சபை வாயிலாக துார்வார வேண்டும்.
பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன், கால்வாய்களை, வேலை உறுதியளிப்பு திட்டத்தில் துார்வார வேண்டும். இதற்கு, மாவட்ட கலெக்டர், ஒன்றிய அதிகாரிகளுக்கு நிர்வாக அனுமதிக்காக கருத்துரு அனுப்ப உத்தரவிட்டார்.
அதில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள் அனுமதி பெறுவதற்கான கருத்துருவை உடனடியாக அனுப்ப வேண்டும். காட்டம்பட்டியில் பி.ஏ.பி., கால்வாய் அருகே, ஏழு கி.மீ.,க்கு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும்.
நிபந்தனை பட்டா வழங்கப்பட்ட புறம்போக்கு நிலத்தில், காயர் பித் உலர வைப்பதால் பல்வேறு இடையூறு ஏற்படுகிறது. விவசாயமும் பாதிக்க கூடாது ;தொழிலும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், மகசூல் இழப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகே நாற்றுப்பண்ணை அமைக்க வேண்டும்.
வேட்டைக்காரன்புதுார் கால்வாய்க்கு இடையூறு ஏற்படுத்தாத மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. வெட்டிய மரங்கள், குறைந்த தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. ஆழியாறு பூங்காவில் இருந்த மரங்களை வெட்டியுள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
சப் - கலெக்டர் பேசுகையில், ''வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கால்வாய் துார்வாரும் பணிகள் குறித்து புகார்கள் வருகின்றன. பணிகளை மேற்கொள்வதுடன், அவற்றை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
வேட்டைக்காரன்புதுார் கால்வாயில் மரங்கள் வெட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்,'' என்றார்.