/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஆண்டுகளாக 'காகித பதில்கள்'; பட்டணம் மக்கள் போராட முடிவு
/
10 ஆண்டுகளாக 'காகித பதில்கள்'; பட்டணம் மக்கள் போராட முடிவு
10 ஆண்டுகளாக 'காகித பதில்கள்'; பட்டணம் மக்கள் போராட முடிவு
10 ஆண்டுகளாக 'காகித பதில்கள்'; பட்டணம் மக்கள் போராட முடிவு
ADDED : ஜூலை 01, 2025 10:27 PM
சூலுார்; குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், 10 ஆண்டுகளாக, 'காகித பதில்கள்' மட்டுமே கிடைப்பதால், பட்டணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டணம் ஊராட்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்கப்படாததால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக குடிநீர், ரோடு, பஸ் வசதி கேட்டு பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்துள்ள மக்கள், மூன்று மாதத்துக்குள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பட்டணம் ஊராட்சி மக்கள் மன்ற அமைப்பாளர்கள் கோவிந்தராஜன், பரணி ஆகியோர் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளாக, தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு வருகிறோம். கிராம சபையில் தீர்மானங்கள், முதல்வர் தனி பிரிவுக்கு மனுக்கள், கலெக்டர் மற்றும் பி.டி.ஓ.,க்களிடம் மனு அளித்தும், வெறும் காகிதத்தில் மட்டுமே பதில் கிடைத்துள்ளன. தீர்வு மட்டுமே கிடைக்கவில்லை.
வரும், மூன்று மாதத்துக்குள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட முடிவு செய்துள்ளோம். சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் முடிவையும் எடுக்கும் நிலைக்கு தள்ள வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.