/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரா டேபிள் டென்னிஸ்; வீரர்கள் அபார ஆட்டம்
/
பாரா டேபிள் டென்னிஸ்; வீரர்கள் அபார ஆட்டம்
ADDED : ஆக 11, 2025 11:16 PM

கோவை; கங்கா மருத்துவமனையின் ஒரு பிரிவான கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம், கோவை பாரா டேபிள் டென்னிஸ் குழு, தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து, தமிழ்நாட்டின் முதல் மாநில அளவிலான பாரா டேபிள் டென்னிஸ் தரநிலை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும், காயத்தின் வகை அடிப்படையில், வகுப்பு ஒன்று முதல் பத்து வரை போட்டியிட்டனர்.
லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் என பல்வேறு சுற்றுகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
கங்கா மருத்துவமனை தலைவர் மற்றும் கங்கா ஸ்பைன் இன்ஜூரி பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.