/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில், பள்ளிகளில் விஜயதசமி வித்யாரம்பம் கோலாகலம் பெற்றோர், குழந்தைள் பங்கேற்பு
/
கோவில், பள்ளிகளில் விஜயதசமி வித்யாரம்பம் கோலாகலம் பெற்றோர், குழந்தைள் பங்கேற்பு
கோவில், பள்ளிகளில் விஜயதசமி வித்யாரம்பம் கோலாகலம் பெற்றோர், குழந்தைள் பங்கேற்பு
கோவில், பள்ளிகளில் விஜயதசமி வித்யாரம்பம் கோலாகலம் பெற்றோர், குழந்தைள் பங்கேற்பு
ADDED : அக் 02, 2025 10:42 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், பள்ளிகளில் விஜயதசமி மற்றும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா கடந்த, 10 நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவில் நேற்றுமுன்தினம் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று விஜயதசமி விழா நடந்தது.
விஜயதசமி விழாவையொட்டி, பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், பெற்றோர் மழலைகளை அழைத்துச் சென்று, நாவில் 'ஓம்' என அர்ச்சகர்கள் மூலமாக எழுதி, சர்க்கரை, பச்சரிசி மற்றும் எழுத்துப்பலகையில், 'அ' என எழுதி கல்வி படிப்பை துவக்க ஆர்வம் காட்டினர்.
பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதரராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெற்றோர்,குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் எழுதினர்.
பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெற்றோர் ஆர்வமாக பங்கேற்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தனர்.
* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விஜயதசமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் ேஹாமம் நடைபெற்றன. நிர்வாகி மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ் ஆகியோர் பேசுகையில், 'கல்வி என்பது வாழ்க்கையின் அடித்தளம். விஜயதசமி நாளில் கல்வியை ஆரம்பிப்பது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்வாழ்வு, வெற்றியை தரும்,' என்றனர். புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன. பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் வித்யாரம்பம் செய்து கல்வியை துவங்கினர். கல்வி கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பள்ளி தாளாளர் பத்மபிரியா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி அருகே ஜமீன் முத்துார் ஏ.ஆர்.பி. இண்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி மற்றும் ப்ரி.கே.ஜி. குழந்தைகள் சேர்க்கையும் நடைபெற்றன.
அதில், 60 பெற்றோர், குழந்தைகளுடன் பங்கேற்றனர். குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில் வேதப்புல் கொண்டு குழந்தைகளின் நாவில், ஓம் என்று எழுதப்பட்டது.
சரஸ்வதி தேவி முன்னிலையில், அரிசி, நெய், மஞ்சள் மூன்றும் சேர்ந்த உடைபடாத முழு அரிசியில் குழந்தைகளின் வாழ்வில் மங்களம் உண்டாக வேண்டும் என ஆசிரியர்கள் குழந்தையின் கையை பிடித்து, 'ஓம்' என எழுத்தை எழுதினர்.
பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், பள்ளி நிர்வாகிகள் மகேஷ்வரி, தங்கமணி, பள்ளி முதல்வர் அரசு பெரியசாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி பி.ஏ. சர்வதேச பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி தலைவர் அப்புக்குட்டி, துணை தலைவர் லட்சுமி, பள்ளி முதல்வர் மகேஷ் கே நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி ஜோதிநகர் சாந்தி மாண்டிசோரி, மகாலிங்கபுரம் சாந்தி சர்வதேச விளையாட்டு பள்ளி, நஞ்சுண்டாபுரம் சாந்தி மாண்டிசோரி சர்வதேச விளையாட்டு பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. வித்யாரம்பம் நடைபெற்றது.
அதில், சரஸ்வதி தேவிக்கு முன், அரிசி, தானியங்களில் முதல் தமிழ் எழுத்தான, 'அ' என குழந்தைகளால் எழுதப்பட்டது.
ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலம், ஞானம், வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற ஆசிர்வாதம் கோரி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.செயலாளர் சாந்தகுமாரி, தாளாளர் பாலாஜி அருண்குமார், இயக்குனர் சுசரிதா, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 6:00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கோவிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் கண்ணன் விஜயதசமி நாளில் குழந்தைகள் நாவில் அகரம் எழுதினார். பின்னர் கோவிலில் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜைகளும் நடந்தன.
வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களிலும் விஜயதசமி நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.