/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழலையர் பள்ளிகளுக்கு 'ஷோ - காஸ்' அங்கீகார நிலை அறிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
/
மழலையர் பள்ளிகளுக்கு 'ஷோ - காஸ்' அங்கீகார நிலை அறிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
மழலையர் பள்ளிகளுக்கு 'ஷோ - காஸ்' அங்கீகார நிலை அறிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
மழலையர் பள்ளிகளுக்கு 'ஷோ - காஸ்' அங்கீகார நிலை அறிந்து கொள்ளுங்கள் பெற்றோரே!
ADDED : ஜூன் 01, 2025 10:59 PM
கோவை: கோவை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'ஷோ - காஸ் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வருவதாக, பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து, ஷோ- காஸ் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோனியம்மாள் கூறியதாவது:
முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம். இதுவரை, இரண்டு முறை ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சில பள்ளிகள் பதிலளித்துள்ளன.
பதில் அளிக்காத பள்ளிகளுக்கு மூன்றாவது முறையாக இறுதி நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதற்கும் பதில் இல்லை என்றால், கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அங்கீகாரமற்ற பள்ளிகள், அரசின் விதிமுறைகளை பின்பற்றி, அங்கீகாரம் பெறச் செய்யும் வழிகாட்டுதல்களை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சேர்க்கும்போது பள்ளியின் அங்கீகார நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.