/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு பொறுப்பு அதிகம்
/
ஒரே ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு பொறுப்பு அதிகம்
ஒரே ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு பொறுப்பு அதிகம்
ஒரே ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு பொறுப்பு அதிகம்
ADDED : செப் 11, 2025 10:12 PM
கோவை; ஒரு காலத்தில், 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற நிலை இருந்தது. இப்போது, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற நிலைமைக்கு காலம் மாறி வருகிறது.
ஒற்றைக் குழந்தையாக வளரும் குழந்தைகளுக்கு சமூக கற்றலை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் என, உளவியல் ஆலோசகர் பாலமுருகன் வலியுறுத்துகிறார்.
அவர் மேலும் கூறியதாவது:
சகோதர, சகோதரிகள் இல்லாமல் ஒற்றை ஆளாக வளரும் குழந்தைகளுக்கு பொதுவாகவே அதிக உணர்திறன் இருக்கும். அவர்களுக்கு தோல்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், சமூக சூழலுடன் பழகும் திறனையும் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது.
அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் விளையாட விடுவது, வெளியே அழைத்துச் செல்வது, உறவினர்களுடன் மற்றும் நண்பர்களுடன் பழக அனுமதிப்பது போன்ற சமூக பழக்கங்களை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். இல்லையெனில், பிறருடன் பழகாத தன்மை குழந்தைகளின் திருமண வாழ்க்கையிலும், பணியிட சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒற்றை குழந்தைகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியம். விளையாட்டின் மூலம் வெற்றியையும், தோல்வியையும் இயல்பாக கற்றுக்கொள்வர்.
இது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும். ஒற்றை குழந்தைகளுக்கு நல்ல கல்வி எளிதில் கிடைக்கும் என்றாலும், சமூக கற்றல் பெற்றோரின் வழிகாட்டுதலால் மட்டுமே கிடைக்கும்.
இவ்வாறு, கூறினார்.