/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நல்ல ஒழுக்க நெறிகளை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்'
/
'நல்ல ஒழுக்க நெறிகளை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்'
'நல்ல ஒழுக்க நெறிகளை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்'
'நல்ல ஒழுக்க நெறிகளை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும்'
ADDED : டிச 23, 2025 05:15 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பகிர்வு மற்றும் குடும்ப விழா நடந்தது.
தர்மபுரி பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமை வகித்தார். மறைக்கல்வி ஆசிரியை அகஸ்டினா வரவேற்றார். மேட்டுப் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் விழாவில் பேசியதாவது:
வாழ்க்கைக்கு கல்வியும், பொருளாதாரமும் முக்கியம். பொருளாதாரத்தில் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றால், நன்கு படிக்க வேண்டும். படிப்பு இல்லை என்றால், எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டீன் ஏஜ் பருவத்தில் கண்காணித்து, அவர்களிடம் தினமும் பள்ளியில் நடந்தவற்றை கேட்க வேண்டும். அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும். அப்போது தான் அவர்களும், மனம் விட்டு பேசுவர்.
நல்ல ஒழுக்க நெறிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். இளைஞர், இளம் பெண்கள் மொபைல் போனை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது. இளம் பருவத்தில் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் மெஹரிபா பர்வின், திருச்சி ஜெபமாலை அன்னை சபை பாதிரியார் அருளானந்தம் ஆகியோர் பேசினர். ஆலய மண்டலத்தில் உள்ள அன்பியங்கள், மரியாயின் சேனை, மறைக்கல்வி மாணவர்கள், வெல்ஸ்புரம், வேடர்காலனி அன்பியத்தினர், பாடல் குழுவினர், இளைஞர் குழுவினர் ஆகியோரின் கிறிஸ்து பிறப்பு பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பங்கு பாதிரியார் பிலிப் நன்றி கூறினார்.

