/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுண்டம்பாளையத்தில் ஓட்டு சாவடி... அதிகரிப்பு அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்
/
கவுண்டம்பாளையத்தில் ஓட்டு சாவடி... அதிகரிப்பு அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்
கவுண்டம்பாளையத்தில் ஓட்டு சாவடி... அதிகரிப்பு அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்
கவுண்டம்பாளையத்தில் ஓட்டு சாவடி... அதிகரிப்பு அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்
ADDED : டிச 23, 2025 05:14 AM

பெ.நா.பாளையம் :கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை, 451ல் இருந்து 548 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில், 451 ஓட்டு சாவடிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 97 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, 548 ஆக உயர்ந்துள்ளது.
இத்தொகுதியில், 1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதால், ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஓட்டுச்சாவடி வாரியாக பணிபுரிய, கூடுதலாக பூத் ஏஜென்ட்கள் தேவைப்படுவர். செலவினம் அதிகரிக்கும் என்பதால், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனாலும், 2 கி.மீ., சுற்றளவுக்குள் ஓட்டு சாவடிகள் இருக்க வேண்டும். அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க நேரம் இருக்க வேண்டும். அதனால், 1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டு சாவடி வீதம் ஓட்டு சாவடிகளை பிரிக்க ஆணையம் அறிவுறுத்தி, தற்போது அதை செய்து காட்டியுள்ளது.
இதன்படி, கவுண்டம்பாளையத்தில் இதுவரை இருந்த, 451 ஓட்டுச் சாவடிகளில், 1200 வாக்காளர்களுக்கு மேல் இருந்த, 97 ஓட்டு சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை, 548 ஆக அதிகரித்துள்ளது.
அரசியல் கட்சியினர் கூறுகையில், 'ஒரு கட்சிக்கு பூத் கமிட்டிதான் அஸ்திவாரம்.
வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பேசும் அளவுக்கு, தகுதியானவர்களை அதில் நியமிக்க வேண்டும். அவர் அந்த குறிப்பிட்ட பகுதியில், நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும். அவருக்கான செலவு தொகையை, அரசியல் கட்சியினர்தான் வழங்க வேண்டும்' என்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'கூடுதலாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படுவதால், தேர்தல் பிரிவினருக்கே வேலை அதிகமாகும். பிரிக்கப்பட வேண்டிய ஓட்டு சாவடிகளை எங்கு நிறுவ வேண்டும் என, முடிவு செய்ய வேண்டும். ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள், ஓட்டு சாவடிக்கான பொருட்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் அதிகரிக்கும். அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
செலவு தொகை அதிகரிக்கும். அரசியல் கட்சியினருக்கு மட்டுமல்லாமல், தேர்தல் பிரிவினருக்கும் வேலைப்பளு அதிகரிக்கும்' என்றனர்.

