/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிறுவர்கள் பிடிபட்டால் பெற்றோருக்கு அபராதம்'
/
'சிறுவர்கள் பிடிபட்டால் பெற்றோருக்கு அபராதம்'
ADDED : ஜன 20, 2025 06:09 AM
மேட்டுப்பாளையம் : சிறுவர்கள் வாகனங்களை ஓட்டும் போது போலீசாரிடம் பிடிபட்டால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையம் பகுதியில், சமுதாய நலக்கூடத்தில், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், பொதுமக்களுடனான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் பேசியதாவது:-
திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக உள்ளது. இதனால் மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி. கேமராக்களை பொதுமக்கள் தங்களது வீடுகள், குறிப்பாக பண்ணை வீடுகளில் கட்டாயம் பொருத்த வேண்டும். வீடுகளை பூட்டி வெளியூர் செல்லும் பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசியம் தகவல் தெரிவிக்க வேண்டும். சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டும் போது போலீசாரிடம் பிடிபட்டால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.