/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழந்தைகளுடன் பேச பெற்றோர் ஏங்கி தவிப்பு'
/
'குழந்தைகளுடன் பேச பெற்றோர் ஏங்கி தவிப்பு'
ADDED : மார் 18, 2024 12:41 AM
கோவை:''நவீன தொழில்நுட்பத்தால், பெற்றோர் - குழந்தைகள் இடையே, பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது,'' என மனநல மீளாய்வு மைய மாவட்ட நீதிபதி ராஜ் பேசினார்.
சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை, பீட்டர் மிஷன் டிரஸ்ட் சார்பில், பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லுாரியில், மகளிர் தின விழாநடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி ராஜ் பேசுகையில், ''பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளையும்,கொடுமைகளையும் சட்டரீதியாக அணுகி வெற்றி பெற, அனைத்து வகையான சூழ்நிலைகளும், நம் நாட்டில் அமைந்துள்ளன. நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் நம்மோடு எப்போது பேசுவார்கள் என்று, பெற்றோர் ஏங்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
விழாவில், கல்லுாரி முதல்வர் கெத்சி, செயலாளர் ராஜன், சங்கமித்ரா அறக்கட்டளை அறங்காவலர் சிந்து, குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகளிர் தின விழாவையொட்டி நடந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, நீதிபதி ராஜ் பரிசுகளை வழங்கினார்.

