/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை நீலிபாளையம் ரவுண்டானாவில் பூங்கா
/
சிறுமுகை நீலிபாளையம் ரவுண்டானாவில் பூங்கா
ADDED : பிப் 15, 2025 07:05 AM

மேட்டுப்பாளையம்;
சிறுமுகை அருகே, ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம் ஊராட்சிகளின் எல்லையில், பெரிய அளவில் ரவுண்டானா உள்ளது.
இந்த இடத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் நீலிபாளையம் பிரிவு சாலை ஆகிய நான்கு சாலைகள் ஒன்றாக இணைகின்றன. இங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.
அதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், பெரிய அளவில் ரவுண்டான அமைத்தது. அதன் பின் விபத்துக்கள் ஏற்படுவது முற்றிலும் குறைந்தது. ஆனால் அந்த இடத்தில் எவ்வித செடிகள் வைக்காததால், புல் செடிகள் வளர்ந்து காணப்பட்டன. இந்த இடத்தில் பூங்கா அமைக்க கோரி, பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரஜினி கூறுகையில், ''சிறுமுகை அருகே நீலிபாளையம் ரவுண்டானாவில் பூங்கா அமைக்க, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி நிர்வாகம் முன் வந்துள்ளது. விரைவில் பூங்காவாக அந்த இடம் மாற்றப்படும்,'' என்றார்.