/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்க் குழும மாணவர்கள் யோகா உலக சாதனை
/
பார்க் குழும மாணவர்கள் யோகா உலக சாதனை
ADDED : டிச 20, 2025 05:41 AM

கோவை: பார்க் குளோபல் பள்ளியின் மாணவர்கள் யோகா ஆசனங்களை மிக உயரத்தில் செய்து, தைரியம், ஒழுக்கம் மற்றும் மன வலிமையை வெளிப்படுத்தி உலக சாதனையை படைத்துள்ளனர்.
மாணவர்கள் ஹேமந்த் மற்றும் ரோஹித் ஆகியோர் சேத் பந்தா தனுராசனாவை, 2 நிமிடங்கள் 42 வினாடிகள் 65 அடி உயரத்தில் வெற்றிகரமாக நடத்தி, குறிப்பிடத்தக்க சமநிலை, கவனம் மற்றும் உடல் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினர்.
மாணவி கவிஷ்கா, சவாலான சுப்ததிவிக்ரம் ஆசன ஏரியல் ஆசனத்தை, 8 நிமிடங்கள் 70 அடி உயரத்தில் சிறப்பாக நிகழ்த்தினார். மாணவர்களின் இந்த சாதனையை பாராட்டி பேசிய, பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா, ''யோகா உடல், மன நலனுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக மூளையின் செயல்பாட்டை துாண்டி, கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது,'' என்றார்.

