தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகனங்களுக்கு 'பார்க்கிங்' வசதிகள்

வாகனங்களுக்கு 'பார்க்கிங்' வசதிகள்

வாகனங்களுக்கு 'பார்க்கிங்' வசதிகள்


ADDED : டிச 11, 2024 09:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, அதிக பக்தர்கள் வர வாய்ப்புள்ளது. இதற்கேற்ப, 11 இடங்களில் கார் 'பார்க்கிங்', இரண்டு இடத்தில் 'டூவீலர் பார்க்கிங்' வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, பஸ்கள் மற்ற வாகனங்கள் நிறுத்தத்துக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், பழநி மார்க்கமாக ஆனைமலை வரும் அனைத்து அரசு பஸ்களும், என்.எம்., சுங்கம், சங்கம்பாளையம், அய்யாமடை பிரிவு, ஆனைமலை முக்கோணம் வழியாக எல்.ஆர்.டி., அருகில் உள்ள தனியார் இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிறுத்த வேண்டும். அதே போல, தென் மாவட்டங்களுக்கு திரும்பி செல்லும் வாகனங்கள், இதே வழியை பயன்படுத்த வேண்டும்.

வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள், என்.எம்., சுங்கம், சங்கம்பாளையம், அய்யாமடை பிரிவு ஆனைமலை, முக்கோணம், ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு, வந்த வழியிலேயே திரும்பி செல்ல வேண்டும்.

அம்பராம்பாளையத்தில் இருந்து ஆனைமலை கோவிலுக்கு வரும் இலகு ரக வாகனங்கள், எல்.ஆர்.டி., அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தற்காலிக பஸ் ஸ்டாப்பில், கோ-ஆப்ரேட்டிவ் வங்கி பின்புறம் உள்ள 'பார்க்கிங்' ஆகிய இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம், என, போலீசார் தெரிவித்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சியில் இருந்து வழக்கமாக ஆனைமலை வழித்தடத்தில், 26 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இதற்காக, பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு, 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்,' என்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us