/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்ன ரோட்டில் பெரிய வாகனங்கள் பார்க்கிங்; சின்னவேடம்பட்டியில் மாணவ, மாணவியர் அவதி
/
சின்ன ரோட்டில் பெரிய வாகனங்கள் பார்க்கிங்; சின்னவேடம்பட்டியில் மாணவ, மாணவியர் அவதி
சின்ன ரோட்டில் பெரிய வாகனங்கள் பார்க்கிங்; சின்னவேடம்பட்டியில் மாணவ, மாணவியர் அவதி
சின்ன ரோட்டில் பெரிய வாகனங்கள் பார்க்கிங்; சின்னவேடம்பட்டியில் மாணவ, மாணவியர் அவதி
ADDED : மார் 17, 2025 12:34 AM

விளக்கு எரிவதில்லை
மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட, சேரன்மாநகர், அப்பாஜி கார்டனில் உள்ள, மின்கம்பத்தில்(எண்: 15), கடந்த ஒரு மாதமாக விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
- நிர்மலா, அப்பாஜி கார்டன்.
சுகாதார சீர்கேடு
மாநகராட்சி, 93வது வார்டுக்கு உட்பட்ட, குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவு, மணிகண்டன் நகர் - சர்ச் வீதி செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- ரோகிணி, குனியமுத்துார்.
போக்குவரத்து நெரிசல்
கணபதி, அத்திப்பாளையம் பிரிவு ரோடு, சின்னவேடம்பட்டியில், குறுகலாக உள்ள சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
-சந்திரன், சின்னவேடம்பட்டி.
பாதுகாப்பு இல்லை
ராம்நகர், அன்சாரி வீதி, ராஜரத்தினம் மருத்துவமனை பின்புறம், பட்டுப்போன மரம் ஒன்று விழும் நிலையில் உள்ளது. இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இந்த இடத்தை கடந்து செல்கின்றனர். மரம் விழுந்து விபத்து ஏற்படும் முன், உரிய அனுமதி பெற்று முறைப்படி இம்மரத்தை அகற்ற வேண்டும்.
- மோகன், ராம்நகர்.
சாலையை சீரமைக்கணும்
மாநகராட்சி, 19வது வார்டுக்கு உட்பட்ட, வீரகேரளம், அண்ணா நகர் ஹவுசிங்யூனிட் பகுதியில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை, பணி முடிந்து பல மாதங்களாகியும், முறையாக செப்பனிடப்படாமல் உள்ளது. லேசான மழை பெய்தால் கூட, இச்சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
- பாலசுந்தரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட்.
குப்பைகளின் சங்கமம்
திருச்சி ரோடு, சிங்காநல்லுார், ஜெய் சாந்தி தியேட்டர் அருகில், நீலிக்கோணம்பாளையம் செல்லும் பிரதான சாலையை ஒட்டியுள்ள, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பை, கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர்.
- தங்கராஜ், நீலிக்கோணம்பாளையம்.
சிதிலமடைந்த நடைபாதை
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகில், சர்ச் ரோட்டில் நடைபாதை கற்கள் சிதிலமடைந்துள்ளது. சிதிலமடைந்துள்ள கற்கள் சாலையோரம் சிதறியுள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இக்கற்களை அப்புறப்படுத்துவதுடன், நடைபாதையையும் சீரமைக்க வேண்டும்.
- பாலன், போத்தனுார்.