/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் வாகனங்கள் 'பார்க்கிங்'; போக்குவரத்து பாதிப்பால் அவதி
/
ரோட்டில் வாகனங்கள் 'பார்க்கிங்'; போக்குவரத்து பாதிப்பால் அவதி
ரோட்டில் வாகனங்கள் 'பார்க்கிங்'; போக்குவரத்து பாதிப்பால் அவதி
ரோட்டில் வாகனங்கள் 'பார்க்கிங்'; போக்குவரத்து பாதிப்பால் அவதி
ADDED : அக் 28, 2024 11:40 PM

பராமரிப்பு இல்லை
உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், மேல்நிலை தொட்டி பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமசுந்தரம், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை ராஜேந்திரா ரோடு, அண்ணா பூங்கா அருகே பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் சிதிலமடைந்தும், அப்பகுதியை சுற்றிலும் பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. குழியை விட்டு ஒதுங்கி செல்வதற்கும் வழியில்லாமல், எதிரிலும் வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- சரவணன், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, மாரியம்மன் கோவில் ரோட்டில் இரண்டு சக்கர வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- சாந்தி, உடுமலை.
சுரங்கப்பாதையில் நீர் தேக்கம்
உடுமலை - தளி ரோடு ரயில்வே மேம்பாலம் சுரங்க பாதையில், மழை பெய்யும் போது, நீர் செல்ல வழி இல்லாமல் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அதில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், உடுமலை.
கால்வாயில் பிளாஸ்டிக்
நெகமம் - தாராபுரம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், பிளாஸ்டிக் கழிவு நிறைந்திருப்பதால் கழிவு நீர் செல்ல முடியாமல் அடைத்து நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, கால்வாயில் தேங்கும் கழிவை அகற்ற வேண்டும்.
-- -மாணிக்கம், நெகமம்.
'குடி' மகன்கள் தொல்லை
உடுமலை, பசுபதி வீதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து வருகின்றனர். 'குடி'மகன்கள் இரவில் வீடுகளின் முன் அமர்ந்து கொள்வதால், குடியிருப்பு வாசிகள் வெளியில் செல்வதற்கும் வழியில்லாமல் உள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளையும் வீடுகளின் முன் போட்டு அசுத்தப்படுத்தி செல்கின்றனர்.
- ராஜராஜன், உடுமலை.
இருளில் ராஜேந்திரா ரோடு
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் உள்ள தெருவிளக்குகளில் பலவும் சரியாக எரிவதில்லை. இரவு நேரங்களில், வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டுநர்களும் குண்டும் குழியுமாக இருப்பதையும் கவனிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
- முருகன், உடுமலை.
ரோட்டில் கால்நடை உலா
வால்பாறை மலைப்பாதையில் அதிக அளவு கால்நடைகள் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -கிரண், வால்பாறை.
தெருவிளக்கு சீரமைக்கணும்!
கிணத்துக்கடவு, அண்ணா நகர் இரண்டாவது வீதியில் உள்ள தெரு விளக்கு கடந்த சில நாட்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இவ்வழியில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் விரைவாக தெருவிளக்கை சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- -மணி, கிணத்துக்கடவு.
வீணாகும் குடிநீர்
கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், குழாயில் ஏற்பட்ட கசிவால் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதனால், நடைபாதையில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-- -ராமகிருஷ்ணன், கிணத்துக்கடவு.
சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி, வள்ளலார் நகர், பொன் நகர், சாய் நகர், செல்லப்பம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில், ரோடு சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் ரோட்டில் பயணிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -குமார், ஊஞ்சவேலாம்பட்டி.