/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தேர்தல் வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : செப் 20, 2024 10:30 PM
கோவை : தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை அரசாணைகளாக வெளியிட வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு, அரசை வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:
2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பெறுப்பேற்ற நாளில் இருந்து, பணி நிரந்தரம் செய்வார் என, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், இரண்டு முறை கூட்டம் நடத்தி, பகுதிநேர ஆசிரியர்கள், நிரந்தர ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்கங்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.
கடந்த ஜனவரி 2500 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது. தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அரசு செயலர்கள் கூட்டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை அரசாணைகளாக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண், 729 ல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில், 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும், பகுதிநேர ஆசிரியர்களையும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.