தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'

'பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'

'பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'


ADDED : பிப் 03, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; பள்ளிக் கல்வித்துறையில், 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து ஆணை வெளியிட்டு இருப்பதை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

பகுதிநேர ஆசிரியர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:

தமிழத்தில், 14 ஆண்டுகளாக, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இன்னும் நிரந்தரம் செய்யவில்லை. பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடியவுள்ளது. இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

பள்ளிக்கல்வித்துறையில், 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து அரசாணை வெயிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் இருந்து, காலமுறை சம்பளத்தோடு தொடர் பணி நீட்டிப்புடன் பணிபுரிந்து வந்த பட்டதாரி, முதுகலை, தொழிற்கல்வி, கணினி ஆசிரியர்கள் உள்பட பணியாளர்கள் என, 47 ஆயிரம் பேர் இதனால் பலன் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், 2011ம் ஆண்டு முதல் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றும், 12 ஆயிரம் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றுகின்றனர். இவர்களையும் நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யப்படுவர் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது போன்று, உடனடியாக பணி நிரந்தரமாக்க வேண்டும். அப்போது தான், தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இதில், அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us