/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்த்தீனியம் உரமாக்குதல்; மாணவிகள் விளக்கம்
/
பார்த்தீனியம் உரமாக்குதல்; மாணவிகள் விளக்கம்
ADDED : ஏப் 16, 2025 10:11 PM
மேட்டுப்பாளையம் ;காரமடையில் 'பார்த்தீனியம் உரமாக்குதல்' என்ற முறை பற்றி விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில், நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், கோவை மாவட்டம் காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் 'பார்த்தீனியம் உரமாக்குதல்' என்ற முறையை பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து, வேளாண் மாணவிகள் கூறுகையில், பார்த்தீனியம் செடிகள் வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள், சுவாசக் கோளாறுகளையும், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன. பார்த்தீனியத்தை உரமாக்குதல் என்பது பார்த்தீனியச் செடிகளை களைக்கொல்லி கொண்டு அழிக்காத தருணத்தில், அவற்றை வேருடன் அகற்றி நன்கு நறுக்கி, ஒரு குழியில் போட்டு ஒரு கிலோ மாட்டுசாணத்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அதன் மேல் தெளிக்கவும். பின் காய்ந்த இலை சருகுகளை அதன் மேல் போட்டு மண் கொண்டு அதனை மூடி மக்கவைத்து உரமாக பயன்படுத்தலாம்.
இச்செடிகள் மக்கி உரமாவதற்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும். இந்த உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தி பயன்பெறலாம்,என்றார்.