/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்க வாங்க
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்க வாங்க
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்க வாங்க
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்க வாங்க
ADDED : ஜன 22, 2025 12:36 AM
தொண்டாமுத்தூர்; பேரூர் தாலுகாவில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நாளை (ஜன., 23) நடக்கிறது.
தமிழக அரசு, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், மாவட்ட கலெக்டர், ஒவ்வொரு மாதமும், ஒரு தாலுகாவில் தங்கி, கள ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டு அறிந்து, அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று அடைகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், நாளை (ஜன.,23) காலை, 9:00 மணி முதல், 24ம் தேதி காலை, 9:00 மணி வரை, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்த முகாமில், நாளை மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலெக்டர், பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.
அதேபோல, பேரூர் தாலுகாவில் உள்ள 24 வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பேரூர் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில், 23ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை, அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனு பெறுகின்றனர்.