/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீடித்த நிலையான வாழ்வியல் குறித்து பயிற்சி தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பங்கேற்பு
/
நீடித்த நிலையான வாழ்வியல் குறித்து பயிற்சி தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பங்கேற்பு
நீடித்த நிலையான வாழ்வியல் குறித்து பயிற்சி தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பங்கேற்பு
நீடித்த நிலையான வாழ்வியல் குறித்து பயிற்சி தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 08, 2024 12:54 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் தேசிய பசுமைப்படை மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான நீடித்த நிலையான வாழ்வியல் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை, மத்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை, கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை அமைப்பு மற்றும், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியின் வரலாற்று துறை ரீச் அமைப்பு சார்பில், நீடித்த வாழ்வியல் பயிற்சி முகாம்,கல்லுாரியில் நடைபெற்றது.
அதில், 100 மாணவர்கள், 50 தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். சேவாலயம் தலைவர் மயில்சாமி தலைமை தாங்கினார் பொள்ளாச்சி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன், இயற்கையை போற்றி வாழ கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கினார். தமிழகமுதல்வரின் (green fellow) கோவை மாவட்ட கிரீன் பெலோ தாரணி, கோவை கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலுசாமி, மரம் அறக்கட்டளை நிறுவனர் லோகநாதன் ஆகியோர் பேசினர்.
ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை கீதா, விதைப்பந்து தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மகிழம், வேம்பு, மலைவேம்பு ஆகிய விதைகளைக்கொண்டு விதைப்பந்து தயார் செய்தனர்.
ஈஷா யோகா மையம் சுவாமி ரப்யா, பேராசிரியர் ஹென்றி நார்வல், யோகநாதன் ஆகியோர் மரக்கன்றுகள் உற்பத்தி, நடுதல், வளர்த்தல் ஆகியவற்றுக்கான பயிற்சி அளித்தனர்.
கல்லுாரி வளாகத்தில், 10 மரக்கன்றுகள் மாணவர்களால் நடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.விக்னேஷ், கழிவு மேலாண்மையில் சிறிய சிறிய செயல்கள் சூழலை பாதுகாக்கும் என்பது குறித்து பேசினார்.
ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், மாணவர்கள் காகித கூழ் கொண்டு தயாரித்த, உபயோகமான பொருட்கள் செய்வது பற்றிய செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.
சேவாலயம் செயலாளர், காகித கவர் செய்வது தொடர்பான செயல்முறை செய்து மாணவர்களையும் காகித கவர் செய்ய பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கித்தான் கைப்பை, குறிப்பேடு, காகித விதை பேனா, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெத்தநாயக்கனுார் அரசுப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன், பொள்ளாச்சி நீர்நிலைகள் அறக்கட்டளை நிர்வாகி மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை சேவாலயம் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.