/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் கட்சிக்கொடி பறக்குது :தேர்தல் அதிகாரிகளின் ஆய்வு தேவை
/
கிராமங்களில் கட்சிக்கொடி பறக்குது :தேர்தல் அதிகாரிகளின் ஆய்வு தேவை
கிராமங்களில் கட்சிக்கொடி பறக்குது :தேர்தல் அதிகாரிகளின் ஆய்வு தேவை
கிராமங்களில் கட்சிக்கொடி பறக்குது :தேர்தல் அதிகாரிகளின் ஆய்வு தேவை
ADDED : மார் 20, 2024 12:11 AM
பொள்ளாச்சி;தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள கம்பங்களில் உள்ள கட்சிக்கொடிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோக்சபா தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில், அனுமதியுடன் சுவர் விளம்பரம் எழுத வேண்டும். கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
அரசு சுவர்களில் விளம்பரம் எழுதக்கூடாது, கொடிக்கம்பங்களில் கட்சி கொடிகள் பறக்க கூடாது உள்ளிட்ட ஏராளமான விதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதனால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், அரசுக்கு சொந்தமான சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை, அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக அழிக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவர்களில் இருந்த அரசியல் போஸ்டர்கள் கிழித்து, அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், கிராமப்புறங்களில், அ.தி.மு.க., -தி.மு.க., பா.ஜ., ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கொடிகள் அகற்றப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, தேர்தல் அதிகாரிகள், கிராமங்கள் தோறும் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படுகிறதா என, ஆய்வு நடத்த வேண்டும். இவைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

