/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திசிலையை சுற்றிலும் கட்சிக்கொடிகள் ஆதிக்கம்
/
காந்திசிலையை சுற்றிலும் கட்சிக்கொடிகள் ஆதிக்கம்
ADDED : ஆக 06, 2025 07:48 PM

வால்பாறை; வால்பாறையில், காந்திசிலையை சுற்றிலும், அரசியல் கட்சியினர் வைத்துள்ள கொடிகளை அகற்ற, போலீசார் தயக்கம் காட்டுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரின் மத்தியில், காந்தி சிலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தி இயக்கப்படுகின்றன.
கடந்த வாரம் வால்பாறை வந்த மாநில சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவரை வரவேற்கும் வகையில், நகரில் ஆளும்கட்சி மற்றும் காங்., கட்சியினர் கொடிகளை கட்டியிருந்தனர். காந்தி சிலையை சுற்றிலும் கட்சிக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
அரசியல் கட்சியினரின் அத்துமீறலை தடுக்க, போலீசாரும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியினரின் இந்த செயல், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.