/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கமல் பதவியேற்பு; கட்சியினர் உற்சாகம்
/
கமல் பதவியேற்பு; கட்சியினர் உற்சாகம்
ADDED : ஜூலை 25, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், ராஜ்யசபா எம்.பி.,யாக நேற்று பதவியேற்றதால், கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் உட்பட நான்கு பேர் நேற்று எம்.பி., ஆக பதவியேற்றனர்.
கோவை மாவட்டத்தில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதி, ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.