தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ படிவங்களை பெறுவதில் கட்சியினர் வாக்குவாதம்

 படிவங்களை பெறுவதில் கட்சியினர் வாக்குவாதம்

 படிவங்களை பெறுவதில் கட்சியினர் வாக்குவாதம்


ADDED : டிச 12, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடக்கிறது. படிவங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்ததால், இதுவரை படிவங்களை திருப்பி அளிக்காத பலர், படிவங்களுடன் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அந்த வாக்காளர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை விசாரித்து, அந்த பகுதி பி.எல்.ஓ., விடம் அளிக்க அறிவுறுத்தினர். அவற்றை சரிபார்த்து, பதிவேற்றம் செய்யும் பணியும், ஏற்கனவே பதிவேற்றம் செய்தவற்றை மறு ஆய்வு செய்யும் பணியும் நடந்தது. இந்நிலையில், அரசியல் கட்சி ஏஜெண்டுகள் சிலர், மொத்தமாக படிவங்களை கொண்டு வந்து பதிவு செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

அதற்கு, மற்ற கட்சி பூத் ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் அந்த முகவரியில் இருப்பதை உறுதி செய்த பின் தான் படிவங்களை பெற முடியும் என அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us