/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைதியாக நடந்தது பாஷா உடல் அடக்கம்
/
அமைதியாக நடந்தது பாஷா உடல் அடக்கம்
ADDED : டிச 18, 2024 05:35 AM
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும், 'அல் - உம்மா' நிறுவனருமான பாஷாவின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது.
கோவையில்,1998, பிப்.,14ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் பலியாகி, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கில் சிறை தண்டனை பெற்று, 'பரோலில்' இருந்த பாஷா, 84, நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு 'நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாஷாவின் உடல் உக்கடம், ரோஸ் அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் இருந்து பூமார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளி வாசலில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதையொட்டி நகரில், 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.