/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 11% அதிகரிப்பு
/
கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 11% அதிகரிப்பு
கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 11% அதிகரிப்பு
கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 11% அதிகரிப்பு
ADDED : அக் 30, 2025 11:26 PM
கோவை:  ஆறு மாதங்களில், கோவை விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை, 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவை விமான நிலையத் தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் இருந்து, தினமும், சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, ஐதராபாத், மும்பை, டில்லி, பெங்களூரு, புனே, கோவா, அகமதாபாத் உள்ளிட்ட உள்நாட்டு சேவையை, 30க்கும் மேற்பட்ட விமானங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் கடந்த ஆறு மாதங்களில், பயணிகளின் எண்ணிக்கை, 11 சதவீதம் அதிகரித்துள்ளது விமான நிலைய ஆணைய தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. நடப்பு நிதியாண்டில்(செப்., வரை) உள்நாடு, 10 ஆயிரத்து 591, வெளிநாட்டுக்கு, 1,051 என, மொத்தம், 11 ஆயிரத்து, 642 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட இது, 15 சதவீதம் அதிகம். சர்வதேசம், 1.60 லட்சம், உள்நாடு, 15.98 லட்சம் என, மொத்தம், 17.58 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது கடந்தாண்டை ஒப்பிடுகையில், 11 சதவீதம் அதிகம்.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறுகையில்,''கோவை விமான நிலையம் தமிழகத்தில் அதிக போக்குவரத்து நிறைந்த விமான நிலையமாக மாறியுள்ளது. கோவையில் இருந்து கொழும்பு, பாங்காக், துபாய், தோகா ஆகிய பகுதிகளுக்கு விமானத் தேவை உள்ளது. அதேபோல், டில்லி, புனே, சென்னை, கோவா ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அகமதாபாத்துக்கு விமானம் இயக்கப்படுகிறது. இது வரவேற்புக்குரியது. விமான நிலைய விரிவாக்கத்தை விரைந்து துவங்கினால் பயணிகள் பயன்பெறுவர்,'' என்றார்.

