/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரசம்ஹாரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க பயணியர் கோரிக்கை
/
சூரசம்ஹாரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க பயணியர் கோரிக்கை
சூரசம்ஹாரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க பயணியர் கோரிக்கை
சூரசம்ஹாரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க பயணியர் கோரிக்கை
ADDED : அக் 21, 2024 06:31 AM
கிணத்துக்கடவு : சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, கிணத்துக்கடவு ரயில் பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சூரசம்ஹார நிகழ்வு ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில் நடக்கும். இதை காண பக்தர்கள் பலர் முருகப்பெருமானின் அறுபடை வீடு மற்றும் பிற பகுதிகளில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
கோவையில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் பழநி மற்றும் திருச்செந்தூர் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சூரசம்ஹார நாட்களில் போதிய அளவு பஸ் வசதி இல்லாமல் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கோவை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கும்பட்சத்தில் பக்தர்கள் பயனடைவர். மேலும், பஸ் போக்குவரத்தை காட்டிலும் ரயிலில், வசதியாகவும், விரைவாகவும் மற்றும் குறைந்த செலவிலும் பயணிக்க முடியும்.
சிறப்பு ரயில் இயக்கும்பட்சத்தில், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு, கோவில்பாளையம் மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள். எனவே, பயணியர் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் இயக்க வேண்டும், என, கிணத்துக்கடவு ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

