/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை
/
இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை
ADDED : நவ 11, 2025 10:46 PM

மேட்டுப்பாளையம்: கீழே விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை, இடித்துவிட்டு புதிதாக கட்டித்தரும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் சாலை வேம்பு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சாலைவேம்பு வழியாக தினமும், 12 முறை அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர, 1994ம் ஆண்டு தனியார் அமைப்பினர் நிழற்குடை அமைத்தனர். இதில் தான் பயணிகள், அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். 31 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போதும் மக்கள் இதைபயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், எந்த நேரத்திலும், ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம், புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

